
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் பிரதேச சபையிலும் போட்டியிடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (14.03) வெள்ளிக்கிழமை காலை, மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.
மன்னார் நகர சபை நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை கடந்த (12.03) அன்று செலுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் மன்னார் பிரதேச சபையிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.