
CMEV நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் தேர்தலில், இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பற்றியும்
வடக்கு கிழக்கில் மக்களுடைய தேர்தல் சம்பந்தமான அறிவும் அது தொடர்பான ஈடுபாடும் மற்றும் விளிம்பு நிலைச் சமூகத்தினரின் தேர்தல் தொடர்பான ஈடுபாடு பற்றியும், அவ்வாறான மக்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது பற்றியும் ஆராயப்பட்டது.
கடந்த (08.03)சனிக்கிழமை காலை 9.30.மணியளவில் மன்னார் நகரப் பகுதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
சி எம் இ வி (CMEV)))நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் ,மாகாண இணைப்பாளர், மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டதோடு.
தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அரசியல் கட்சிகளுடைய பிரதிநிதிகள், மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.