இலங்கை கடற்பரப்பிற்குள் மீண்டும் 32 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற் பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்(23.02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார் . கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்... Read more »

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை.... Read more »
Ad Widget

மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் கைது.

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20.02) வியாழன் அதிகாலை 4 இந்திய மீனவர்களை ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். வட... Read more »

மூன்றாவது முறையாகவும் திருப்பி அனுப்பப்பட்ட  கணியமண் அகழ்வாராய்ச்சியாளர்கள்.(Video) 

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) புதன்கிழமை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொள்ள வந்த 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் மக்களின் பாரிய எதிர்ப்பினால், அதனைக் கைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். கடந்த திங்கட்கிழமை... Read more »

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மன்னார்  நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17.02) மாலை அனுமதி... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடன், மன்னார் மாவட்ட மீனவர் சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்.(video)

இன்றைய தினம்(112.02) புதன்கிழமை மாலை, மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில்... Read more »

மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் வங்காலை பறவைகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் துப்புரவுப் பணி.(video)

மன்னார் பிரதேச சபை, நகரசபை பேசாலை பிரதேச சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை, பெலகிகோஸ் நிறுவனம் ஆகியவற்றின். ஒத்துழைப்போடு. மன்னார் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினரால். இன்றைய தினம் (12.02) புதன் கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 11 மணி வரை வங்காலை... Read more »

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-கைது செய்யப்பட்ட 7  சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (10.02) உத்தரவிட்டார். 7 சந்தேக... Read more »

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு.

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின்   77 ஆவது சுதந்திர தினம் இன்று ச(4.02) செவ்வாய்க்கிழமை இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(4) மன்னார் மாவட்ட செயலகத்தில்... Read more »

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவையினங்களுடன் மூவர் கைது.

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக்  கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல்  பகுதியில் வைத்து, பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற் படையினர்... Read more »