வழமைக்கு திரும்பியது இலங்கை புகையிரத சேவை

இலங்கை புகையிரத என்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (13.09.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கம் தமது வேலைநிறுத்தத்தை... Read more »

யாழில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

யாழில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (12-09-2023) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், வைத்திய... Read more »
Ad Widget

கட்டுநாக்க விமான நிலையத்தில் பிரபல குற்றவாளி கைது!

பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல குற்றவாளி நேபாளத்தில் இருந்து திரும்பி வந்தபோதே கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொலைபேசி பாவனைக்கு தடை விதிக்க தீர்மானம்!

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஸ்மாட் போன் பாவனைக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இதன்படி, முதற்கட்டமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஸ்மாட் போண் பாவனைக்கான தடை நடைமுறைக்கு வந்துள்ளது. யாழப்பாண போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு... Read more »

இலங்கையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 14... Read more »

விடுதலை புலிகள் குறித்து முதன்முறையாக மனம் திறந்த நடிகர் முத்தையா முரளிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகளால் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, தமிழீழ விடுதலைப் புலிகள்... Read more »

சீனாவின் சினோபெக் இரண்டாவது எரிபொருள் நிலையம் திறந்து வைப்பு!

சீனாவின் சினோபெக் நிறுவனம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று(13) எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருட்களையும் 3 ரூபாய் விலை குறைப்பின் கீழ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று புதன்கிழமை (செம்டெம்பர் 13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.7737 ஆக பதிவாகியுள்ளது. அதேசயம் டொலரின் விற்பனை விலை ரூபா 328.5308 ஆகவும் பதிவாகியுள்ளது. Read more »

திருமணத்திற்கு புறம்பான உறவால் நிகழ்ந்த சோகம்!

பாணந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கத்தியால் வெட்டி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றுக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து ஒருவரே இச் செயலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி அத்தோடு படுகாயமடைந்த மூவரும் பாணந்துறை ஆதார... Read more »

ரயில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு!

ஹொரபே ரயில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனைத் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் இதேவேளை, ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக... Read more »