கட்டுநாக்க விமான நிலையத்தில் பிரபல குற்றவாளி கைது!

பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல குற்றவாளி நேபாளத்தில் இருந்து திரும்பி வந்தபோதே கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நேபாளம் – காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கடவுச்சீட்டில் ‘சேனாதிரகே கருணாரத்ன’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

இருப்பினும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைய அவர் கணேமுல்லை சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுத்ததாக விசேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்படுவார் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor