யாழில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

யாழில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (12-09-2023) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தினார்.
இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

போதைப்பொருள் பாவனை என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தினையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றமையினால், அதனை தடுக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் உணர்வு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: webeditor