பிரசவ வலி தவறான முடிவெடுத்த பெண்

கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய இரண்டு இரட்டைக் குழந்தைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப்... Read more »

தடம் புரண்டது டிக்கிரி மெனிகே

நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லூக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இன்று... Read more »
Ad Widget

கோளாறான ஸ்ரீலங்கன் விமானம்: உடனடியாக தரையிறக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. 201 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்தே... Read more »

ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான... Read more »

சுய விருப்பில் பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உள்ளாகும் சிறுமிகள்

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் நிலையங்களின் பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியரான சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து... Read more »

மொட்டு கட்சியின் நான்கு ஜனாதிபதி வேட்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிருவதற்கான வேட்பாளர்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பரிசீலித்து வருகிறது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, தமது கட்சியில் நான்கு... Read more »

சிறைக்கைதி தப்பியோட்டம்

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எம்பிலிபிட்டிய கதுருகாசர திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்... Read more »

அரசாங்கத்துக்கு டெங்கு அபராதத்தால் ஐந்து மில்லியன் வருவாய்

டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தின் மூலம் சுமார் 5,704,500.00 மில்லியன் ரூபாய் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ருவண் விஜேமுனி தெரிவித்தார். நேற்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்... Read more »

இலங்கையில் இனி வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி கிடையாது

ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு குறித்து வெளிநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ‘யுவான் 6’ என்ற சீனக் கப்பலைத் தொடர்ந்து அடுத்த... Read more »

வரி அதிகரிப்பு எரிபொருள், தங்கத்தின் விலை உயரும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி மற்றும் உபேர் போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகளின் விலைகள்... Read more »