அரசாங்கத்துக்கு டெங்கு அபராதத்தால் ஐந்து மில்லியன் வருவாய்

டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தின் மூலம் சுமார் 5,704,500.00 மில்லியன் ரூபாய் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ருவண் விஜேமுனி தெரிவித்தார்.

நேற்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுற்றுச்சூழலை பாதுகாப்பற்ற மற்றும் டெங்கு பரவும் அபாயத்துடன் தூய்மையற்ற முறையில் வைத்திருந்த சுமார் 16860 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக

இந்தவருடம் ஆரம்பம் முதல் இறுதிவரை 71,6213 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 16860 இடங்கள் டெங்கு முட்டையிட்டு இனத்தை பெருக்கும் இடமாக அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அடையாளம் காணப்பட்ட 16,860 இடங்களில் 1788 இடங்களில் முட்டைகள் இட்டு நுளம்புகள் இனம்பெருக்குவதற்கு தயாராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது, 4332 இடங்களுக்குரியவர்களுக்கு எச்சரிக்கை துண்டுபிரசுரம் வழங்கி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் 808பேருக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுத்து பணம் அறவிடப்பட்டதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin