மகிந்தவை பார்த்து பயப்படும் அனுரகுமார திஸாநாயக்க

மகிந்த ராஜபக்ச மீதுள்ள பயம் காரணமாகவே அனுரகுமார திஸாநாயக்க, அவரது தொண்டியில் இரத்தம் வரும் வரை திட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போதும் மிகப் பெரிய... Read more »

சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையில் முரண்பாடு

தேசிய சுதந்திர தின நிகழ்வுக்காக நேற்று நடைபெற்ற ஒத்திகையின் போது ஏற்படட கருத்து முரண்பாடான சம்பவம் காரணமாக அதில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்புடைய அனைவரும் பயிற்சிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர். சம்பிரதாயபூர்வமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ள வருகை... Read more »
Ad Widget

பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழு!

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த காணொளியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. குறித்த காணொளியில், இதயநோயாளியான தனது தந்தைக்கு உணவளிப்பதற்காக உணவு பொதியை திறந்த போது, அதில் ஒரு பெரிய புழு ஒன்று இருந்திக்கின்றது. “அது... Read more »

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மொட்டுக் கட்சியின் பிரதானிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தில் கூடுதல் பொறுப்புகளை வழங்குதல்,... Read more »

வைத்தியசாலை பணிகளில் இராணுவம்

வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவும் வகையில் முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அசௌகரியங்களை... Read more »

அடையாள வேலை நிறுத்தம்: கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக குவிந்த ஊழியர்கள்

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை இடைநிறுத்தம், வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் அல்லது DAT கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி... Read more »

வர்த்தக கப்பல்கள் ஆபிரிக்காவை சுற்றி செல்வதால் செலவுகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கின் செங்கடல் பகுதியில் யேமன் ஹவுதி போராளிகள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்பான நெருக்கடி நிலைமை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து அதற்கு பதில் தாக்குதல்... Read more »

கடற்கொள்ளையர்களை மண்டியிட வைத்த கூட்டு முயற்சி

சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களுடன் ‘லொரென்சோ புத்தா 04’ எனும் மீன்பிடி படகு நேற்றைய தினம் (31) மஹே (Mahe) தீவை சென்றடைந்துள்ளது. மீனவர்களுடன் படகை கைப்பற்றிய மூன்று சோமாலிய கடற்கொள்ளையர்களை சீஷெல்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... Read more »

சிபெட்கோ, IOC ஐத் தொடர்ந்து விலைகளை மாற்றிய சினோபெக்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC ஆகியவற்றைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை... Read more »

அங்கவீனமடைந்த பொலிஸாருக்கு கூடுதல் சலுகைகள்

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸாருக்கான சம்பள முறைமை மற்றும் 55 வயது வரை பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர... Read more »