ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மொட்டுக் கட்சியின் பிரதானிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தில் கூடுதல் பொறுப்புகளை வழங்குதல், பாராளுமன்ற மேற்பார்வைக்குழுக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பதவிகள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தம் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலளார் சட்டத்தரணி சாகர காரியவசம், கட்சியின் பொருளாளர் பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொகுகே உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி தரப்பில் ஜனாதிபதியுடன் சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்த்தன உள்ளிட்டோரும கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வௌியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.