இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மென்செஸ்டரில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் இஷான் கிஷன் அதிகபட்சமாக 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சேம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 191 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜெக்கொப் பெத்தெல் 76 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

