சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையில் முரண்பாடு

தேசிய சுதந்திர தின நிகழ்வுக்காக நேற்று நடைபெற்ற ஒத்திகையின் போது ஏற்படட கருத்து முரண்பாடான சம்பவம் காரணமாக அதில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்புடைய அனைவரும் பயிற்சிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

சம்பிரதாயபூர்வமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ள வருகை தரும் ஜனாதிபதியின் வாகனத்தின் இருப்புறங்களிலும் செல்ல பொலிஸ் குதிரைப்படையை நீக்கிவிட்டு, இராணுவ மோட்டார் சைக்கிள் படைப்பிரிவை சேர்த்தமையால் ஏற்பட்ட சிக்கலான சூழல் காரணமாக இந்த நிலைமையேற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாட்டு குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்தையில் ஏற்பட்ட இணக்கத்திற்கு பின்னர் பொலிஸ் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரும் மீண்டும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

சுதந்திர தின பேரணியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் பிரிவினர்,குதிரைப்படை,இசைக்குழு, விசேட அதிரடிப்படையின் தாக்குதல் பிரிவு என்பன கலந்துக்கெள்ள உள்ளன.

சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ளும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு முன்னால் பொலிஸ் குதிரைப்படையினர் பயணிப்பது நீண்டகாலமாக இருந்து வரும் சம்பிரதாயம்.

இம்முறை இந்த பழக்கத்தை மாற்றியதால், கருத்து முரண்பாடான நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சுதந்திர தின ஒத்திகையில் ஈடுபட்ட பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த அனைவரும் விலகிக்கொண்டனர்.

இதன் பின்னர் மேலதிடத்தில் இருந்த கிடைத்த உத்தரவுக்கு அமைய சம்பிரதாயபூர்வமான முறையில் ஒத்திகைகள் நடைபெற்றதுடன் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்தவர்கள் அவற்றில் கலந்துக்கொண்டனர்.

Recommended For You

About the Author: admin