மாகாண சபைத் தேர்தல் பிற்போக சுமந்திரனே காரணம்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி எம்.ஏ.சுமந்திரனே காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்... Read more »

நாடாளுமன்றத்தில் போராட்டம்: விசாரணை நடத்துவதாக நீதி அமைச்சர் உறுதி

வவுனியா, வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தர்க்கம் ஏற்பட்டது. தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரின் அத்துமீறலை கண்டிக்கும் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அச்சமயம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபைக்கு தலைமை தாங்கியிருந்தார். ஆளும் தரப்பு... Read more »
Ad Widget

ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு வற்புறுத்தியவர்களை அம்பலப்படுத்துவேன்

அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்குமாறு தன்னை வற்புறுத்திய அரசியல்வாதிகள் குறித்து அம்பலப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றும், நாளை புதன் கிழமையும் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாளை குறித்த நம்பிக்கையில்லா... Read more »

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அணியொன்று கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதாக தெரியவருகிறது. ஹர்ஷ டி சில்வா, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரோஹினி கவிரத்ன, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களே இவ்வாறு... Read more »

கட்சியின் முடிவே இறுதித் தீர்மானம்

எந்தவொரு கட்சிக்குள்ளும் தேர்தலை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் உள்ளனர், ஆனால் கட்சியின் முடிவே , இறுதித் தீர்மானம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொதுத்... Read more »

மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்தும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.... Read more »

கண்டி ஏரியில் முதலை மீன்

மிகப் பழமையான மீன் இனமான முதலை மீன் (Alligator Gar) எனப்படும் சுமார் 9 அடி நீளமான மீன் இனம் கண்டி ஏரியில் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மீன்களை... Read more »

ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்ற தேர்தலா?

இலங்கைத் தீவானது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டினது எதிர்காலம் முழுவதும் தேர்தலில் மக்களால் வழங்கப்படும் வாக்குகளில் தங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ? ஜனாதிபதித் தேர்தல் ? என அரசியல்... Read more »

கோட்டாபய பதவி விலகியது தவறு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே சுகீஸ்வர பண்டார இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது புலனாய்வுப்... Read more »

காலநிலையை பொருட்படுத்தாது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள்

ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். புத்தாண்டு... Read more »