ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெப்பமான காலநிலையையும் பொருட்படுத்தாது இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதலாம் தவணை தொடரும் என்பதை கருத்திற்கொண்டு விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
நிலவும் வறட்சி காரணமாக தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் அதிக வெளிப்புற செயற்பாடுகளால் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
பெற்றோர்களும் இவ்வாறானதொரு காலநிலையில் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வெளிப்புற செயற்பாடுகளை குறைத்துக்கொள்ளுமாறு வானிலையாளர்,வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
ஆனாலும் பாடசாலைகளில் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்று வருவதை காண முடிகின்றது.