தேர்தலில் ரணில் தோற்றாலும் ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதி!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோற்றாலும், ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாவார் என இராஜாங்க அமைச்சர் அனுரத ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்ய இன மத பேதங்கள் இன்றி இணைந்து... Read more »

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம்

துப்பாக்கிகளை பயன்படுத்த படையினருக்கு அதிகாரம் – பொது பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸாருக்கும்... Read more »
Ad Widget

வாக்குப் பெட்டிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள். இந்நிலையில், வாக்குச் சீட்டு... Read more »

தேர்தல் கால விடுமுறை தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை!

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. வேதனம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்காளர்களுக்கு, தமது... Read more »

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

Tik Tok ஊடாக பணம் பந்தயம் கட்டுவதற்காக கெஸ்பேவ பகுதி மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற 6 இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார்... Read more »

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சொகுசு கார் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா – வெண்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 34 வயதுடைய காரின் சாரதி படுகாயமடைந்த... Read more »

இலங்கையில் பெண்களின் தொழில் முயற்சியை வெளிக்கொண்டு வர வேண்டும் – திலித் ஜயவீர!

நாட்டின் மொத்த தேசிய உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடாத பெண்களை ஈடுபடுத்துவதே தமது நோக்கமாகும் என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கலல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அங்கு மேலும் உரையாற்றிய திலித்... Read more »

புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு!

நேற்று நிறைவடைந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன்,... Read more »

ஜனாதிபதி தேர்தலால் ஏற்பட்டுள்ள திருப்புமுனை-நாட்டை விட்டு தப்பியோடும் பல குற்றவாளிகள்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் திரும்புமுனைகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பலர் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த... Read more »

சர்வதேச நாணய நிதியத்தை சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை தனது பொருளாதார மீட்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், நாடு, இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரையில் அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியம்... Read more »