நேபாளத்தில் தஞ்சமடைந்தாா் கோட்டா!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேபாளம் சென்றடைந்தார்.
2019 தேர்தலில் 3 வீத வாக்குகளை மாத்திரம் பெற்ற திஸாநாயக்க தற்போது பெரும்பான்மையை பெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், 2022 அரகலய போராட்டத்தின் போது, வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பூட்டான் தலைநகர் திரும்பும் வழியாக கத்மாண்டு நகரை வந்தடைந்ததாக நோபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காத்மாண்டுவில், ராஜபக்சவுக்கு கோடீஸ்வர தொழிலதிபர் பினோத் சவுத்ரி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை காலை (23) கத்மாண்டுவில் தரையிறங்கிய பின்னர், கோட்டபாய, ஜாம்சிகேலில் உள்ள மிவாண்டா ஹோட்டலில் தங்கியுள்ளார்.
75 வயதான கோட்டபாய மற்றும் அவரது மனைவி ட்ரூக் ஏர் விமானம் KB 400 மூலமாக கத்மாண்டுவை அடைந்தனர்.
காத்மாண்டுவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், புதன்கிழமை பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin