புதையல் தோண்டிய ஐவர் கைது: தடுப்புக் காவலில் விசாரிக்க கல்முனை நீதிமன்றம் உத்தரவு!

வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை(27) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர்... Read more »

ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்!- சாகர

”ராஜபக்ஷவினர் மீதான குற்றச்சாட்டுக்களை தேசிய மக்கள் சக்தி நிரூபித்துக் காட்ட வேண்டும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியினர் ராஜபக்ஷ தரப்பினர் மீது பல... Read more »
Ad Widget

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாகப் போராட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கெஸ்பேவை தொகுதி அமைப்பாளர் உபுல் மலேவன தலைமையிலான குழுவினரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

பொதுத் தேர்தல்: முக்கிய இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி?

பொதுத் தேர்தலில் கூட்டணியாகக் களமிறங்குவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம்... Read more »

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லெபனான் மற்றும் சிரியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களையும் அவதானமாக... Read more »

மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்?

”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு... Read more »

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள அஞ்சும் தேசிய மக்கள் சக்தியினர்- கயந்த கருணாதிலக

பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலின் போது நூற்றுக்கு 50 வீத பெரும்பான்மையினை பெறமுடியாமல் போனமையினால் முதற்தடவையாக விருப்பு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 43 வீத வாக்குகளினால்... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு புள்ளிகளை வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். Read more »

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது அனைத்து அரசியல்... Read more »

இறக்காமத்தில் போதைப்பொருளுடன் கைதானவரிடம் மேலதிக விசாரணை!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (27) மாலை இரகசிய தகவல் ஒன்றைத் தொடர்ந்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை... Read more »