உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் உக்ரைனின் எரிசக்தி தேவைகள் குறித்தும், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கவுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர்... Read more »

இத்தாலியில் ரயில் விபத்து: 17 பேர் காயம்

வடக்கு இத்தாலியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

விசா கட்டமைப்பை கடுமையாக்கும் நாடு!

சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்குவதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் அறிவித்துள்ளார். இதற்கமைய புதிய விதிமுறைகளின்படி சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியால் கல்வி கற்க வேண்டுமாயின் ஆங்கிலப் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோரின் எண்ணிகையை குறைக்கும்... Read more »

இத்தாலி மருத்துவமனையில் திடீர் தீப்பரவல்!

இத்தாலியின் டிவோலி நகரில் உள்ள மருத்துமனையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று வயோதிபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலையடுத்து, கர்ப்பிணிப் பெண்ணொருவர், குழந்தைகள் உட்பட சுமார் 200 பேரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவதற்கு இத்தாலிய தீயணைப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெளியேற்றப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ரோம் நகரை அண்மித்த... Read more »

சீனாவில் சுவாச நோய் பரவல்

சீனாவில் சுவாச நோய் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் சுவாச நோய் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் வைத்தியசாலைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் முதற்கட்டடாக வார நாட்களில் சீனாவில் வைத்தியசாலைகள் கூடங்களை அமைக்கும்... Read more »

50 ஆண்டுகளாக தண்ணீர், குளிர் பானங்களை குடித்து வாழ்ந்து வரும் மூதாட்டி

வியட்நாமில் தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து 75 வயது மூதாட்டி ஒருவர் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த 75 வயது யுய் தி லொய் எனும் மூதாட்டி கடந்த 50 வருடங்களாக தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை மட்டும்... Read more »

சீன வெளிவிவகார அமைச்சர் காணாமல் போயுள்ளார்

அமெரிக்காவில் சீனத் தூதுவராக கடமையாற்றிய நிலையில் உடனடியாக மிக உயர்ந்த பதவியைப் பெற்று, சீனாவின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய Qin Gang எங்கு இருக்கின்றார் என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. அவர் இறுதியாக கடந்த ஜூன் மாதம் ஊடகங்களில் காணப்பட்டார். தற்போது அவர்... Read more »

தமிழர்களுக்கு எதிராக தொடரும் அநீதி

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பில் பிரித்தானிய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது. அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையில் தற்போதைய நிலவரம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள்... Read more »

விசா இன்றி இந்தோனேசியா செல்லலாம்

இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தமது நாட்டிற்குள் நுழைவு அனுமதியை வழங்க இந்தோனேசியா தீர்மானித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை ஊக்குவித்து பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா,... Read more »

அமெரிக்க தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள்... Read more »