பெரும்பான்மையை இழந்த தாய்வான் ஆளும் கட்சி: பதவி விலகும் என அறிவிப்பு

தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதை அடுத்து பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி உள்ளது.

தாய்வான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய புதிய பாராளுமன்றம் கூடும் முன்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யும் என தாய்வான் பிரதமர் சென் சியென்-ஜென் அறிவித்துள்ளார்.

தாய்வானில் கடந்த 13 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து புதிய பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி அமோக வெற்றியை பெற்றது. எனினும் பாராளுமன்றத்தில் அந்த கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது.

இந்த நிலையில், தாய்வான் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய புதிய ஜனாதிபதி பிரதமரை நியமிப்பார். அதன் பின்னர், பிரதமர் அமைச்சரவையை நியமிப்பார்.

Recommended For You

About the Author: admin