முழுமையான வெற்றி வரை ஹமாஸுடனான போர்: இஸ்ரேல் பிரதமர்

காசாவில் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு அமைப்பதை எதிர்ப்பதாக அமெரிக்காவிடம் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வியாழன் (18) மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றில் இஸ்ரேலிய பிரதமர்,

பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முழு வெற்றி அடையும் வரையிலும், 130 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்படும் வரையிலும் காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரை இஸ்ரேல் படைகள் தொடரும்.

இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே போரை முடிவுக்குக் கொண்டுவருவதானது யூத அரசின் பாதுகாப்பிற்கு தீங்கினை விளைவிக்கும்.

வெற்றி பெறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம், எனினும் அதை அடைய நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு பின்னர் காசாவில் 25,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 85% பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேநேரம் இஸ்ரேல் தரப்பில் 1300 க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் தாக்குதலின் விளைவாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், போருக்கு நிலையான முடிவைப் பற்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் தீவிர அழுத்தத்தில் உள்ளது.

அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பேர் நிறுத்த முடிவினை புதுப்பிக்க வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin