இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை!
👉 அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய (single-use) பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
👉 பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
👉 நிறுவனத் தலைவர்கள், அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

