எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி குறிப்பிட்டார். வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக... Read more »

வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 7... Read more »
Ad Widget

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்தை மோதித்தள்ளிய டிப்பர் வாகனம்

வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்துடன் டிப்பர் வாகனம் மோதி பாரிய விபத்து ஒன்றினை ஏற்படுத்திய சம்பவம் கேப்பாப்புலவு வீதியில் இன்று (26) இடம்பெற்றுள்ளது. கேப்பாப்புலவு புதுக்குடியிருப்பு வீதியில் ஐங்கன்குள வயல் வெளி வீதிப்பகுதியில் வயல் வேலைக்காக வந்த உழவு இயந்திரம் வீதியின் ஓரமாக... Read more »

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் செயலாளர்: யாப்புக்கு மாறாக நியமனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பதவிக்குச் சட்டவிரோதமான முறையில் புதிதாகப் பதவியேற்றவருக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக இதுவரை காலமும் பதவி வகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய... Read more »

அயல்வீட்டு பெண்ணால் சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு கல்வீச்சு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அயல் வீட்டில் உள்ள கட்சி ஒன்றின் ஆதரவாளரான பெண் ஒருவராலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ரவிராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட பெண்ணினால் சசிகலா தொடர்ந்து... Read more »

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

கம்பஹா மாவட்டம் அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 06 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் மாணவனே... Read more »

ஈரான் மீதான தாக்குதலை முடித்துவிட்டோம்: இஸ்ரேல்

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், “இஸ்ரேலுக்கு எதிரான... Read more »

பொதுதேர்தல் திகதியில் மாற்றம்?

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறித்து சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல்... Read more »

மின் கட்டணத் திருத்தம் டிசம்பரில்

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு... Read more »

அறுகம்பே சுற்றுலா: வழமைக்குத் திரும்பியது

அறுகம்பேவில் சுற்றுலாப் தளங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு விடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயழ்பு வாழ்க்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இடம்பெறுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளமாக உள்ள அறுகம்பேவை இலக்குவைத்து... Read more »