பொதுதேர்தல் திகதியில் மாற்றம்?

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறித்து சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால் அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது பல தரப்பினரும் தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையகமும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சட்ட ஆலோசனைக்கு பின்னர் தேர்தல் திகதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin