யாழில் கோர விபத்து: அரச அதிகாரி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அரச அதிகாரி ஒருவர் இன்று (12.03.2024) உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை... Read more »

டி20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக்?: ரோகித் ஷர்மாவின் வேடிக்கை

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தலைவரும், மும்பை அணியின் வீரருமான ரோகித் ஷர்மாவின் வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (ஆர்சிபி) ஏழு விக்கெட்... Read more »
Ad Widget

சுமந்திரனை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: டக்ளஸ்

அழையா விருந்தாளியாக ஜே.வி.பியின் மாநாட்டுக்கு சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கட்சி மாநாடொன்றை நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு... Read more »

விமானத் தாக்குதல்: ரஷ்ய கூலிப்படையாக செயற்பட்ட இரு இலங்கையர்கள் பலி

உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று (10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இரண்டு இராணுவ வீரர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி... Read more »

உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகரிக்க

ஸ்மார்ட் போன் வாங்கிய புதிதில் நல்ல வேகமாக வேலை செய்யும். ஆனால், போகப்போக அதன் செயல்திறன் குறைவதைப் போல் தோன்றும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் போனை முழுவதுமாக ரீசெட் செய்வது அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு ரீசெட் செய்யும்போது போன் புதிது போல் தொழிற்படும்.... Read more »

ஜே.வி.பிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் வித்தியாசம் இல்லை: நாமல்

மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரையே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் எனவும், கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் தனக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும்... Read more »

இரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இரயிலில் இருந்து தவறி விழுந்த பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்று விடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலே இந்த விபத்து நேர்ந்துள்ளது. படுகாயமடைந்த சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக... Read more »

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக கடந்த 5ஆம் திகதி முதல் சுமார் 200 மேலதிக... Read more »

கோலிக்கு அடுத்த நிலையில் உள்ள வீரர் – ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவாரா?

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக், ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியில் அவரது கவனம் இருக்க... Read more »

ஈரானுக்கான விமான சேவையை ரத்து செய்த ஜெர்மானி

ஜெர்மானிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சா, ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கான விமான சேவையை சனிக்கிழமை வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழலால் இந்த முடிவை எடுத்ததாக லுப்தான்சா தெரிவித்துள்ளது. ஜெர்மனின் பிராங்க்போர்ட் நகரில் இருந்து தெஹ்ரானுக்கு வாரத்திற்கு 5 விமானங்கள்... Read more »