உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் அதிகரிக்க

ஸ்மார்ட் போன் வாங்கிய புதிதில் நல்ல வேகமாக வேலை செய்யும். ஆனால், போகப்போக அதன் செயல்திறன் குறைவதைப் போல் தோன்றும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் போனை முழுவதுமாக ரீசெட் செய்வது அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும்.

இவ்வாறு ரீசெட் செய்யும்போது போன் புதிது போல் தொழிற்படும்.

எதற்காக ரீசெட் செய்ய வேண்டும்?

போனை ரீசெட் செய்யும்போது டிவைஸில் உள்ள தேவையற்ற வைரஸ்களை நீக்க உதவுவதோடு, போனின் செயல்திறனையும் அதிகரிக்கச் செய்யும்.

போனானது ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கைக்கு மாறும்போது இந்த ரீசெட் அவசியப்படுகிறது.

அந்த வகையில் ஆண்ட்ராய்ட் போனில் ஃபேக்டரி ரீசெட் எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம்.

முதலில் உங்கள் அனைத்து டேட்டாக்களையும் பேக்கப் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் போனை முழுமையாக பேக் அப் செய்துகொள்ள வேண்டும்.

போனில் செட்டிங்ஸை ஓபன் செய்து அதில் சிஸ்டம் என்ற ஒப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பின் ஸ்க்ரோல் செய்து ரீசெட் என்ற ஒப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது அதில் எரேஸ் ஆல் டேட்டா அல்லது ஃபேக்டரி ரீசெட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

பின் தொலைபேசி இலக்கத்தை என்டர் செய்ய வேண்டும்.

இப்போது ரீசெட் ஆப்ஷனை உறுதி செய்தால் போன் முழுவதுமாக ரீசெட் செய்யப்படும்.

ரெக்கவரி மோட் பயன்படுத்தி எப்படி ஃபேக்டரி செட் செய்யலாம்?

மென்பொருள் பிரச்சினை காரணமாக உங்கள் போனை ஆக்ஸஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் ரெக்கவரி மோட் மூலமாக ரீசெட் செய்து கொள்ளலாம்.

முதலில் உங்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து கொள்ளுங்கள்.

இப்போது பவர் பட்டன் மற்றும் வால்யூம் டவுன் பட்டன் இரண்டையும் ஒன்றாக அழுத்தவம்.

இப்போது உங்கள் போன் ரெக்கவரி மூலம் பூட் செய்யப்படும்.

அதில் வால்யூம்க்கான பட்டனை பயன்படுத்தி நேவிகேட் செய்து மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் வைப் டேட்டா என்ற ஆப்ஷனை தெரிவு செய்து ஃபார்மேட் டேட்டா என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.

வெரிஃபிகேஷன் கோட் கேட்கப்படும் பொழுது அதனை என்டர் செய்து டேட்டாவை ரிசெட் செய்யவும்.

Recommended For You

About the Author: admin