புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக கடந்த 5ஆம் திகதி முதல் சுமார் 200 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போது நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் போதியளவு தொலைதூர பேருந்துகள் சேவையில் இன்மையால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்று (11) 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரதான மார்க்கத்தில் வழமையான தொலைதூர இரயில் சேவைகள் தவிர்ந்து, கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை 12 மேலதிக இரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin