பிரிதானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதத்தில் சரிவு

பிரிதானியாவில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதம் கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளதாக IWSR நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியே அதிகமாக மது அருந்தும் காலமாக ஒவ்வொரு ஆண்டு பதிவாகி வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு பிரிதானிய மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவாகவே மது அருந்தியுள்ளதாக IWSR நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் வாரத்திற்கு சராசரியாக 10.2 மதுபானங்களையே மதுப்பிரியர்கள் அருந்தியுள்ளனர். இது 1990ஆம் ஆண்டுமுதல் மேற்கொள்ளப்பட்டுவரும் தரவுகளின் பிரகாரம் மிகவும் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு சராசரியாக பிரித்தானியாவில் வயது வந்த ஒருவர் கிறிஸ்மஸ் காலப்பகுதியில் வாரத்திற்கு 14 மதுபானங்களை அருந்தியுள்ளதாக IWSR நிறுவனத்தின் ஆராய்வுகள் தெரிவிக்கின்றன.

வயதான மது நுகர்வோர் உடலியல் ரீதியான பாதிப்புகள் காரணமாக அதிகமாக மது அருந்துவதை குறைத்துள்ளமையால் இவ்வாண்டு சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என IWSR ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மார்டன் லோட்விஜ்க்ஸ் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin