குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார்! – மஹிந்த

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும் மக்களை பாதுகாப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி, தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு... Read more »

சுமந்திரனுக்கு எதிராக மன்னார் பொலிஸில் சாள்ஸ் நிர்மலநாதன் முறைப்பாடு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்குப் புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையிலான கருத்துகளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று... Read more »
Ad Widget

தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்லும் ரணில்: காரணம் வெளியானது!

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பதவி ஒன்றைப் பெறவா செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அப்படி இல்லை என்றும் ஓய்வெடுக்க வெளிநாடு செல்கிறேன் என்றும் கூறினார். மேலும்... Read more »

ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது பொய்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு பொய்யானது என சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்... Read more »

இன்றைய ராசிபலன் 04.11.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலனை தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் திட்டங்கள் தொடர்பான விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படும். இன்று... Read more »

நாளை தொழிற்சங்க போராட்டம்: ரயில்வே அதிபர்கள் சங்கம் அறிவிப்பு

தமது பிரச்சினைகளுக்கு இன்றைய தினம் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அண்மையில்... Read more »

சரியான கொள்கை காரணமாகவே சர்வதேச ரீதியாகவும் உதவி கிடைக்கிறது: ரஞ்சன்

ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஹாலிஎல பகுதியில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட முதன்மை வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தலைமையில்... Read more »

அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி... Read more »

அஸ்வெசும கொடுப்பனவு: முறைகேடுகளை ஆராய பத்து பேர் கொண்ட குழு

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது அநீதி இழைக்கப்பட்ட நபர்களை கண்டறிவதற்கும் முறையான விசாரணை நடத்த சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பலன்களை வழங்குவதில் உள்ள அசௌகரியங்கள், நியாயமற்ற செயன்முறை மற்றும் சாதாரண... Read more »

போட்ஸ்வானா நாட்டில் 58 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சி மாற்றம்

போட்ஸ்வானா நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக டுமா பொகோ இன்று சனிக்கிழமை பதவியேற்றுள்ளார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டுமா பொகோவுக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார். உலகில் அதிக யானைகளை கொண்ட நாடாகவும் அதிக வைர சுரங்கங்கள் அமைந்துள்ள நாடாகவும் போட்ஸ்வானா காணப்படுகிறது. அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில்... Read more »