அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி பற்றி பொய்யான அவதூறுகளை எழுப்பி மக்களை தவறாக வழிநடத்திய அரசியல்வாதிகளுக்கு இன்று பொதுக்கூட்டம் கூட நடத்த முடியாதுள்ளது.

ஏனென்றால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதிலளிப்பார்கள்? தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மூன்று வாரங்களும் மூன்று மாதங்களுமே இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் மக்களை திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது, பலவீனமான அரசியல்வாதிகளே தேசிய மக்கள் சக்தியை அவதூறதகப் பேசினர்.

ஆனால் அவை அனைத்தும் பொய்யானவை என்பதை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால் நாட்டில் வன்முறை ஏற்படும் என்றார்கள். ஆனால் அவ்வாறொன்றும் இடம்பெறவில்லை.

இனிமேல் இதுபோன்ற அரசியலை அனுமதிக்க மாட்டோம்.இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

எல்லா ஏப்ரல் மாதங்களிலும் முன்னாள் ஜனாதிபதி நுவரெலியாவில் இருப்பார். மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்காக இல்லை. அவருடைய தேவைக்காக.

நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமான காணியில் ஜனாதிபதியின் பாவனைக்காக ஓர்கானிக் மரக்கறிகள் பயிரிடப்பட்டுள்ளதாக அறிந்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்திற்கு 60 கிலோகிராம் நிறையுடைய இரண்டு காய்கறி மூட்டைகள் வருகின்றன.

அவர்களுக்கு லொறிகளில் வரும் மரக்கறிகளை உண்ண முடியாது. ஏனெ்றால் அவர்கள் உயர் இடத்தில் இருக்கிறார்கள். அந்த மரக்கறிகளை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தயாரிக்கும் உணவுக்காக பயன்படுத்துமாறு நான் கேட்டுக் கொண்டேன்.

25 அமைச்சர்கள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பிரதி அமைச்சர்கள் கொண்ட அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்கி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin