மேஷம்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலனை தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் திட்டங்கள் தொடர்பான விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படும். இன்று மன அழுத்தமான சூழல் இருக்கும். உங்கள் மனைவியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடனை அடைப்பதில் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி, பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் இனிமையிலே கடைப்பிடிப்பது நல்லது. இன்று தாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். முதலீடு விஷயத்தில் நிபுணர்கள் ஆலோசனை பெறுவது நல்லது. அரசாங்கம் தொடர்பான ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சில காலமாக சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று யாரையும் கேலி கிண்டல் செய்ய வேண்டாம். மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சிறப்பான வெற்றியை பெறுவார்கள். பண முதலீடு, சொத்து தொடர்பான முதலீடு பயனுள்ளதாக இருக்கும். இன்று உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஓரளவு சாதகமான சூழல் இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்கள் வேலைகள் குறித்த நேரத்தில் முடிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக உங்களின் புதிய திட்டங்கள் சிறப்பான பலனைத் தரும். இன்று புதிய முதலீடு விஷயத்தில் நலம் விரும்பிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடைய பரஸ்பர அன்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, சம்பளம் உயர்வு ஏற்படும். இன்று சில தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை தொந்தரவு செய்யும். வாழ்க்கைத் துணை ஆதரவால் மனக்கவலையிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சுப காரியங்கள் நடக்கக் கூடிய நாள். வேலை தீர்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அன்றாட வாழ்க்கையில் உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் அளவிற்கு நிதி நிலை முன்னேற்றம் அடையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பீர்கள். குடும்பத்துடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான பலன் கிடைக்க கூடிய நாள். நீண்ட நாட்களாக வியாபாரத்தில் இருக்கக்கூடிய பண பரிவர்த்தனை பிரச்சனைகள் தீரும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இன்று எதிரிகளை சமாளிப்பதில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும். முரட்டுத்தனமாகவும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் செயலில் கட்டுப்படுத்தவும். உங்கள் சொந்த தொழில் தொடர்பாக கடன் வாங்கும் சூழல் இருந்தால், கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இன்று குடும்ப சுப நிகழ்ச்சி தொடர்பாக விவாதிப்பீர்கள். சொந்த தொழிலில் புதிய திட்டத்துடன் செயல்படுவது நல்லது.
தனுசு
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் முன்னேற்றத்தைப் பார்த்து எதிரிகள் கூட புகழ்வார்கள். அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று வீட்டு விசேஷம் தொடர்பாக பணம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.
மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வணிகம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்லவும். இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குழந்தைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வளர்ச்சி தரக்கூடிய நாள். வியாபாரத்தில் எதிரிகளால் நஷ்டம் ஏற்படலாம். இருப்பினும் அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சியில் ஈடுபடவும். குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. அரசு வேலை தொடர்பான முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.இல்லையெனில் அதை திரும்ப பெறுவது கடினம். உங்கள் உறவில் விரிசல் ஏற்படுத்தும். பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் வேலை தொடர்பான எந்த ஒரு முக்கிய விஷயம் தள்ளி போடாமல் செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரின் திருமணம் தொடர்பான நல்ல வாய்ப்புகள் அமையும்.