அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது அநீதி இழைக்கப்பட்ட நபர்களை கண்டறிவதற்கும் முறையான விசாரணை நடத்த சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பலன்களை வழங்குவதில் உள்ள அசௌகரியங்கள், நியாயமற்ற செயன்முறை மற்றும் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதே இந்தக் குழுவின் நோக்கம் ஆகும்.
சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் அறிக்கையின்படி, குழுவின் உத்தியோகப்பூர்வ உறுப்பினர்களில் சமூக சேவையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளனர்.
அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் முறையை மேம்படுத்தல் பல்வேறு தரப்பினரின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான சட்ட மற்றும் செயற்பாட்டு ஆலோசனைகளை வழங்குவதும் இந்தக் குழுவின் நோக்கமாகும்.