11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி வருவதால் பிரதானக் கட்சிகளும், ஏனைய கட்சிகளும், சுயேச்சை குழுக்களும் இறுதிகட்ட பரப்புரைகளில்... Read more »

ரணில் அரசாங்கம்10 பேருக்கு வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள்

இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதியை கட்டுப்பாடுகள் விதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தியிருந்த 2023ஆம் ஆண்டில் வரியற்ற வாகன அனுமதிப்பத்திர முறைமையில் 10 பேர் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுங்க திணைக்களம்... Read more »
Ad Widget

மறைத்து வைத்திருக்கும் வாகனங்கள்: தீவிர நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையின் கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புடைய பிரபுக்கள் பயன்படுத்திய பதிவு செய்யப்படாத வாகனங்களை தேடுவதற்காக பொலிஸார், சுங்க திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளன. இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக்... Read more »

ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு Appointment முறை திறக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு Appointment புதிய முறை இன்று 6 முதல் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்போது https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்: கடவுச்சீட்டை பெறுவதற்கு ஒரு நாள் அல்லது சாதாரண சேவைக்கான திகதியை முன்பதிவு செய்யலாம். Read more »

அனுபவம் வாய்ந்த உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள்: சுகாதார அமைச்சு ஒப்புதல்

இலங்கை தீவிலுள்ள அனைத்து போதைப்பொருள் சோதனைகளுக்கும் பொறுப்பான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் செயலிழந்த சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாடுகளை புதுப்பிக்க சில அனுபவமிக்க உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »

அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் இருக்காது: ஜனாதிபதி

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற... Read more »

ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது!

ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது. ஏன ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் புத்தளம் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார... Read more »

சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல்

தென்மராட்சி பாரளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராஜின் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .சிறிய உரசல் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் . தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது ..சாவகச்சேரி தமிழரசுக்கிளையின் குழு ஒன்றும் அதன் பெண் ஒருவர் தலைமையில்... Read more »

இந்தியாவுடன் ரணில் செய்த ஒன்பது ஒப்பந்தங்களை அநுர மறைப்பது ஏன்?:

”இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான சமகால அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையை இந்தியாவின் பொறிக்குள் சிக்கவைக்கும் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் மௌனம் காக்கும் அரசாங்கத்தின் போக்கு பாரிய சந்தேகத்தை... Read more »

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை

தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் இனி விசா பெற வேண்டிய அவசியம் இல்லை என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 11 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த விசா சலுகையை காலவரையறையின்றி தாய்லாந்து அரசு நீட்டித்துள்ளதால் இந்தியப் பயணிகள் தாய்லாந்து செல்லும் முன்னோ... Read more »