ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது!

ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது. ஏன ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்

புத்தளம் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்

பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்ககளை முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் மற்றுமொரு வெற்றிப்பேரணி கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புத்தளம் பகுதியில் இன்று இடம்பெற்றது

பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் பெருமளவிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்

மேலும் இதன்போது பேரணியில் கலந்து கொண்ட மக்கள் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்

அத்துடன் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் வரலாற்றில் முதற்தடவையாக புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான முஸ்லிமகள் இந்த பேரணியில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக அதிகளவான பெண்கள் கலந்து கொண்டதனை அவதானிக்கமுடிந்தது

ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர்

ரஞ்சன் ராமநாயக்க

இன்று பிரதான கட்சிகளின் கூட்டங்களில் கூட இந்தளவில் மக்கள் ஆதரவு வழங்கியதில்லை. நாம் ஊழலுக்கு எதிரானவர்கள் உண்மையை தயங்காமல் பேசுபவர்கள். எனவே மக்களுக்காக நாம் குரல்கொடுப்போம் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

நாம் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தி அரசியல் செய்பவர்கள் அல்ல. பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது.கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் புத்தளம் மாவட்டமக்களை ஏமாற்றிவந்தனர்.

ஆனால் இனியும் அந்த மக்களை அவர்களால் ஏமாற்றமுடியாது.ஊழல்வாதிகளையும் கொள்ளையர்களையும் மக்கள் அடையாள் கண்டுள்ளனர். ஊழல் மோசடியற்ற தூய அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் .அதனாலேயே ஒலிவாங்கி சின்னத்தில் புதிய கட்சியின் நாம் தேர்தலில் களமறிங்கியுள்ளோம்.

நாட்டிற்கும் மக்களுக்கு சேவை செய்வதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் கடந்த காலங்களிலும் அதனை நிரூபித்துள்ளோம். ரஞ்சன் ராமநாயக்க ஊழல்மோசடிகளில் ஈடுபடுபவரும் அல்ல. ஊழல்வாதிகளுடன் தொடர்புடையவரும் அல்ல.

நான் ஊழல் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவன் அல்ல என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர் எனவே தேர்தலில் வெற்றிபெறுவதுடன் புத்தளம் மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

Recommended For You

About the Author: admin