தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் இனி விசா பெற வேண்டிய அவசியம் இல்லை என அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 11 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த விசா சலுகையை காலவரையறையின்றி தாய்லாந்து அரசு நீட்டித்துள்ளதால் இந்தியப் பயணிகள் தாய்லாந்து செல்லும் முன்னோ அல்லது இறங்கிய பிறகோ விசா பெற வேண்டிய அவசியம் இல்லை.
புதிய நடைமுறைகளின் படி, இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரையில் தங்கி வரலாம்.
உள்ளூரில் இருக்கும் குடிவரவு அலுவலகத்தில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு வருகையை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந் நடைமுறை தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் இலகுவாக உள்ளது.