இலங்கை தீவிலுள்ள அனைத்து போதைப்பொருள் சோதனைகளுக்கும் பொறுப்பான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் செயலிழந்த சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாடுகளை புதுப்பிக்க சில அனுபவமிக்க உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இழிவான மனித இம்யூனோகுளோபின் மோசடி மற்றும் பல மருந்து சோதனைகள் அம்பலப்படுத்தப்பட்டதன் பின்னணியில், இரண்டு அனுபவம் வாய்ந்த மருந்து ஆய்வாளர்கள் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஓய்வு பெற்றமையால் தற்போது குறித்த அதிகாரசபை தற்போது கிட்டத்தட்ட செயலிழந்துள்ளது.
அதிகார சபையின் சோதனைப் பணிகளை மேற்கொள்ளவும் சந்தையில் விற்கப்படும் தரமற்ற அல்லது போலி மருந்துகளை பறிமுதல் செய்யவும் தினசரி காகிதப் பணிகளை நிர்வகிக்கவும் இரண்டு மருந்தாளர்களை நியமித்துள்ளது.
சட்ட அமலாக்கப் பிரிவை மறுசீரமைப்பதற்கு சுகாதார அமைச்சு அனுபவமிக்க உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் சிலரை நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்ததாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அமலாக்கக் கடமைகளை விரைவில் புதுப்பிக்க, அது தொடர்பான சட்டங்களுடன் பயிற்சி அளிப்பதற்காக எதிர்காலத்தில் மேலும் புதிய தகுதி வாய்ந்த மருந்தாளுனர்கள் பிரிவில் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டின் சட்டம் எண் 5 ஆல் அதிகாரம் பெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, நாட்டில் கிடைக்கும் மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு, தரம், செயல்திறன் போன்றவற்றை உறுதி செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் பொறுப்பாகக் கொண்டுள்ளது.
மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை அதிகார சபை ஒழுங்குப்படுத்துகிறது.