அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டுக்கு வழங்கியதாக அந்நாட்டின் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் மார்க் பர்கஸ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு துரோகம் செய்த அந்த முன்னாள் அரசியல்வாதியின் பெயரை வெளியிட வேண்டும் என கோரிக்கைகன்... Read more »

தாயகம் வரும் சாந்தனின் வித்துடல்

உயிரிழந்த சாந்தனின் உடல் விமானம் மூலம் நாளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான உத்தரவினை இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி  காலை 6 மணிக்கு சாந்தனின் சடலம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து எடுத்துவரப்பட்டு, காலை 7 மணிக்கு கட்டுநாயக்க... Read more »
Ad Widget

யாப்பு விதிகள் மீறப்பட்டதை சிறிதரன் தரப்பு ஒப்புக் கொண்டது

தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளதை ஏற்றுக்கொள்வதாக எதிர்த்தரப்பினர் மன்றில் தெரிவித்துள்ளனர் என்று வழக்காளிகள் சார்பில் மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள் “ஒருவன்” செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை வழக்காளிகளுக்கு நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் யாப்பு விதிகளுக்கு அமைய தீர்மானங்கள்... Read more »

பசில் ராஜபக்சவே மொட்டு கட்சியின் பிரதமர் வேட்பாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை இலக்காக்கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த... Read more »

அனுர குமாரவுக்கு கறைபடிந்த கடந்த காலம் உண்டு: ஹிருணிகா

அனுர குமார திஸாநாயக்கவுக்கு பயங்கரமான, கறைபடிந்த ஒரு கடந்த காலம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரியவுக்கு சிறந்ததொரு அரசியல் பயணம் உள்ளதால் அவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் எனவும் ஹிருணிகா... Read more »

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீன்

Gymnothorax polyuranodon எனப்படும் அரியவகை மீன் இனம் 84 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிங் கங்கையின் வக்வெல்ல பகுதியில் இந்த மீன் இனத்தின் ஒரு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரியல் ஆய்வாளர்களான பெர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹிரண்ய சுதசிங்க , வைல்ட் ஐலண்ட் அறக்கட்டளையின் தரிந்து... Read more »

அமெரிக்காவின் ரஷ்யா தொடர்பான கருத்து நிராகரிப்பு: பிரான்ஸ் எச்சரிக்கை

ரஷ்யாவின் சொத்துத் தொடர்பில் அமெரிக்கா நிதிச் செயலாளர் வெளியிட்ட கருத்தை, பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ருநோ லி மையர் சவாலுக்குள்ளாக்கியுள்ளார். ரஷ்யா, உக்ரையின் மீது மேற்கொண்ட அத்துமீறிய ஆயுதத் தாக்குதல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அந்த... Read more »

பதவி பறிபோகும் நிலையில் மோடி

பதவி பறிபோகும் நிலையில் பிரதமர் நேந்திர மோடி தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவரின் நிலையைப் பார்க்கப் பரிதாபமாகவுள்ளதாகவும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு மோடி விஜயம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த... Read more »

இந்தியாவிலிருந்து 3 சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

இந்தியாவிலிருந்து 3 உறுப்பினர் சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு, தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் கலாசார நிலையத்திற்கு (பிப்ரவரி 29) சவாரி செய்வதற்கு முன், தூதரக ஜெனரல் ஸ்ரீ... Read more »

அந்தார்ட்டிகாவில் பறவை காய்ச்சல்: பென்குயின் பறவைகளுக்கு அச்சுறுத்தல்

அந்தார்ட்டிகாவில் உள்ள பென்குயின் பறவைகளுக்கு பறவை காயச்சல் ஏற்படும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் வைரஸ் (Avian Influenza) H5N1, அந்தார்ட்டிகாவில் உள்ள அர்ஜென்டினாவின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இறந்த கிடந்த ஸ்குவா கடற்சிங்கத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் அறிவியல் ஆய்வுக்கான... Read more »