ரஷ்யாவின் சொத்துத் தொடர்பில் அமெரிக்கா நிதிச் செயலாளர் வெளியிட்ட கருத்தை, பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ருநோ லி மையர் சவாலுக்குள்ளாக்கியுள்ளார்.
ரஷ்யா, உக்ரையின் மீது மேற்கொண்ட அத்துமீறிய ஆயுதத் தாக்குதல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அந்த வகையில் ரஷ்யாவிற்கு சொந்தமான பல பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு முடங்கிய சொத்துக்களை 300 பில்லியன் டொலராக சட்டரீதியாக மாற்ற முடியும் என அமெரிக்க நிதிச் செயலாளர் ஜெனெட் ஜிலேன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜி07 அமைப்பின் நிதியமைச்சர்களின் மாநாட்டின் பின்னர் கருத்து வெளியிட்ட பிரான்ஸ் நிதியமைச்சர், அவ்வாறு ரஷ்யாவின் சொத்துக்களை சட்டரீதியாக பணமாக மாற்றுவதற்கு ஏற்புடை சர்வதேச சட்டம் இல்லை எனவும் அதற்காக மேலும் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது உறுப்பு நாடுகளுக்கிடையே பிளவினை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.