அந்தார்ட்டிகாவில் உள்ள பென்குயின் பறவைகளுக்கு பறவை காயச்சல் ஏற்படும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் வைரஸ் (Avian Influenza) H5N1, அந்தார்ட்டிகாவில் உள்ள அர்ஜென்டினாவின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இறந்த கிடந்த ஸ்குவா கடற்சிங்கத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் அறிவியல் ஆய்வுக்கான பேரவை (CSIC) தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா விஞ்ஞானிகள் ஸ்பெயின் விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
வெகுதூரத்தையும், சிறப்பான வானிலையையும் கடந்து அந்தார்ட்டிகா கண்டத்தில் வாழும் பறவைகளை வைரஸ் தாக்குவது குறித்து அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தார்ட்டிகாவின் பெருநிலப்பரப்பிற்கு பறவை காய்ச்சல் வைரஸ் பரவி வருவதால், அங்கு வாழும் ஏராளமான பெங்குயின்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்தார்ட்டிகாவில் குறுகிய இடத்தில் அதிகளவான பெங்குவின் வாழ்வதால்,வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.