கோட்டாபயவின் புத்தகத்தில் உண்மை இருப்பது போல் பொய்யும் உள்ளது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து தானும் விமல் வீரவங்சவும் நீக்கப்படவில்லை எனவும் அவரே தம்மை நீக்கியதாகவும் அதன் பின்னர் அவரது அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகியது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் தொடர்பில்... Read more »

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜகம் – நல்லூரில் வெடித்தது போராட்டம்

வவுனியா வடக்கு – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணம் – நல்லூரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக மாலை 4 மணிக்குப்... Read more »
Ad Widget

மலி ஐயாவை நினைவூட்டிய பந்து வீச்சு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நுவான் துஷாராவின் டி20 ஹெட்ரிக் சாதனை தனக்கு லசித் மலிங்காவை நினைவுபடுத்தியதாக சக வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, சில்ஹெட்டில் அசத்தலான ஹெட்ரிக் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சனிக்கிழமையன்று பங்களாதேஷுக்கு எதிரான... Read more »

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4 இற்கு 1 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டதைத் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த தரவரிசையில் 117 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும்... Read more »

முத்தரப்பு தொடரில் விளையாடவுள்ள இலங்கை U-19 மகளிர் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (11) அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று அணிகளும் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடரை மார்ச் மற்றும் ஏப்ரல்... Read more »

இரண்டாவது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளால் வென்ற ஆஸி

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியதுடன், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. Read more »

ரிஷப் பண்டின் மீள் வருகை குறித்து பிசிசிஐ இன் அறிவிப்பு

காயம் காரணமாக ஓய்விலிருக்கும் ரிஷப் பண்ட் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணத்தின் போது அணிக்கு திரும்புவார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா (Jay Shah) குறிப்பிட்டுள்ளார். Read more »

மக்களை வஞ்சிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள்

இலங்கையைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு என்ற விடயமும் பௌத்த மதம் என்ற அம்சமும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் வாக்கிற்கான ஆயுதங்கள். இதனை மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் மிகவும் கச்சிதமாக கையாண்டு ஆட்சிப்பீடம் ஏறியிருந்தார்கள். இராணுவத்தின் பலத்தினை அதிகரிப்பதாக கூறிக்கொண்டு பாதுகாப்புத் துறைக்கு பெருந்தொகை பணத்தை... Read more »

ஐ.எம்.எப். இன் முன்மொழிவுகள் குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டதுடன் சர்வதேச நாணய... Read more »

அல்-கைய்தாவின் அரேபிய தீபகற்ப குழுவின் தலைவர் மரணம்

ஏமனை தலைமையிடமாக கொண்ட அல்-கைய்தா அமைப்பின் அரேபிய தீபகற்பத்தின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி (Khalid Al Batarfi) மரணமடைந்துள்ளார். இந்தத் தகவலை அல்-கைய்தா அமைப்பினர் நேற்றிரவு (10) அறிவித்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி,அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்தவர் என்பதுடன் அவரை... Read more »