அல்-கைய்தாவின் அரேபிய தீபகற்ப குழுவின் தலைவர் மரணம்

ஏமனை தலைமையிடமாக கொண்ட அல்-கைய்தா அமைப்பின் அரேபிய தீபகற்பத்தின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி (Khalid Al Batarfi) மரணமடைந்துள்ளார்.

இந்தத் தகவலை அல்-கைய்தா அமைப்பினர் நேற்றிரவு (10) அறிவித்துள்ளனர்.

அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி,அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்தவர் என்பதுடன் அவரை கொலை செய்பவருக்கு அமெரிக்க அரசாங்கம் ஐந்து மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

அல்-கைய்தா நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொலை செய்யப்பட்ட பின்னர், அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவே அந்த அமைப்பின் மிகவும் ஆபத்தான பிரிவாக கருதப்படுகிறது.

தலைவரின்மரணம் தொடர்பாக அல்-கைய்தா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.அதில், காலித் அல்-பதர்ஃபியின் உடலில் அல்-கைய்தா அமைப்பின் கொடி போர்த்தப்பட்டுள்ளது.

காலித் அல்-பதர்ஃபிக்கு 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அல்-கைய்தாவின் தள புலனாய்வு குழு இது தொடர்பான விபரங்களை அறிவித்துள்ளது.

அவர் தாக்குதலில் கொல்லப்பட்டரா அல்லது இயற்கை மரணமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஏமனில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு இன்று (11) முதல் ஆரம்பமாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin