இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று (11) அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று அணிகளும் டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடரை மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 இல் விளையாடும்.


