மக்களை வஞ்சிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள்

இலங்கையைப் பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு என்ற விடயமும் பௌத்த மதம் என்ற அம்சமும் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் வாக்கிற்கான ஆயுதங்கள். இதனை மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் மிகவும் கச்சிதமாக கையாண்டு ஆட்சிப்பீடம் ஏறியிருந்தார்கள்.

இராணுவத்தின் பலத்தினை அதிகரிப்பதாக கூறிக்கொண்டு பாதுகாப்புத் துறைக்கு பெருந்தொகை பணத்தை செலவு செய்வதும், உற்பத்தியைவிட இறக்குமதியில் தங்கிருந்தது பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டதும் ஆட்சியாளர்களின் கங்கரியமே.

மக்களின் வாக்குகளை அள்ளிக்கொள்ள கட்சிகள் கொள்கை வகுப்பாக அரசாங்க பதவிகளை வழங்குவருகின்றன.

இதன் விளைவு இன்று பொதுத்துறையான அதிகளவு உத்தியோகத்தர்களைக் கொண்ட பெருமளவு பணச் செலவுடைய துறையாக மாறியுள்ளது. இதனாலும் பாரிய நிதி செலவாகின்றது.

அது மக்களின் தலையில் வரியாக சுமத்தப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் பாதுகாப்புத்துறைக்கான செலவுகள் குறைந்தபாடு இல்லை. பெருமளவு தொகையான உழைக்கும் வர்க்கம் வீணடிக்கப்படுகின்றது.கேட்டால் இலங்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களினால் அச்சுறுத்தல் என சிங்கள மக்களிடம் பிரசாரம் செய்து கொள்வது.

தொடர்ச்சியாக மக்களை ஏமாற்ற முடியாது

ஆனாலும் தற்போது நிலைமை மாறியுள்ளது. மக்கள் பொருளாதார திட்டங்களையும் அபிவிருத்திகளையும் தனிநபர் வருமானத்தினையும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வாக்குப் பெறமுடியாது. யுத்தம் காரணமாக அழிவடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டுக்க இதுவரை எந்த திட்டமும் இல்லை. வெறுமனே உல்லாசத் துறையை எதிர்பார்த்து இருக்கின்றனர். இறக்குமதியே அதிக செலவை ஏற்படுத்துகின்றது.

அதுவே ஆட்சியாளர்களுக்கு அதிக தரகுப் பணத்தினையும் தருகின்றது. விளைநிலம், கடல், காடு, மலை, ஆறு என வளங்கள் கொட்டிக்கிடந்தாலும் ஆட்சியாளர்கள் தேசிய உணவு உற்பத்தியில் பெரிதாக அக்கறை கொள்வதில்லை.

வெளிநிநாடுகளின் வர்த்தகத்திற்கே வளம் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதாரத்தை ஊக்கிவித்தால் தமது அரசியல் இருப்பு இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும் காணப்படுகின்றது.

பிராந்திய ஏனைய வல்லரசுகளின் கடனைப் பெறமுடியாது போனால் தம்மால் காசு பார்க்க முடியாது என்ற நிலையும் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. ஆக இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் தமது அரசியல் இருப்பே அன்றி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெற்றுவதில்லை.

உணவு உற்பத்தியினை மேற்கொள்ளக் கூடிய தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் இளைஞர்களுக்கு தொழில் வழங்க முடியும். நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க முடியும்.

அவ்வாறு உணவில் தன்னிறைவு காணும் போது ஏனையவற் ஏற்றுமதி செய்து வருமானத்தைப் பெறமுடியும். இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது. ஆனாலும் ஆட்சியாளர்கள் வெளிநாட்டு முதலீடுகனையும், கடனையும், இறக்குமதியையுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனை சரி செய்வதற்கு சிங்கள புத்திஜீவிகள் மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.

Recommended For You

About the Author: admin