மன்னாரில் கோலாகலமாய் நடைபெற்ற கலை கலாச்சாரப் பண்பாட்டுப் பெரு விழா.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய மாவட்ட கலை,கலாச்சார பண்பாட்டு விழா இன்று(29.10) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்,... Read more »

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் மன்னார்,சிவில் சமுக கட்டமைப்புக்களுடன்,கலந்துரையாடல்.

இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும். அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில்... Read more »
Ad Widget

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை நாங்கள் இழைத்துவிடக்கூடாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ்மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த்  தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்தவேண்டுமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27.10) ஞாயிற்றுக் கிழமை,மன்னார்... Read more »

மன்னாரில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை,காலை 11 மணிவரை, இடியுடன் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது... Read more »

சுவிஸ் தூதரகக் குழுவினர் மன்னாரில், சிவில் நிறுவன அமைப்புகளுடன் சந்திப்பு!

சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த செவ்வாய் கிழமை (22.10) மெசிடோ, சமூக மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் மன்னார் அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சிவில் அமைப்புகள், மற்றும் மெசிடோ நிறுவன பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில்... Read more »

சுயேச்சைக் குழுக்களை நிராகரித்து, தேசிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்- சட்டத்தரணி செல்வராசா டினேசன்.

இன்றைய தினம் (23.10),புதன்கிழமை, பேசாலை, மற்றும் தலைமன்னார் பகுதிகளில் தனது கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தங்களது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் என்று வாக்களிப்பதற்கு இது உள்ளூராட்சித் தேர்தல்... Read more »