சுவிஸ் தூதரகக் குழுவினர் மன்னாரில், சிவில் நிறுவன அமைப்புகளுடன் சந்திப்பு!

சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த செவ்வாய் கிழமை (22.10) மெசிடோ, சமூக மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் மன்னார் அலுவலகத்திற்கு
விஜயம் செய்துள்ளனர்.

சிவில் அமைப்புகள், மற்றும் மெசிடோ நிறுவன பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் தற்பொழுதுள்ள அரசியல் நிலைப்பாடு , பொருளாதாரம் , மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு சிவில் மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை சுவீஸ் தூதரகக் குழுவினர் கரிசனையாகக் கேட்டறிந்ததாக மெசிடோ நிறவனத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

சர்வதேசச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த அரசு வடக்கு கிழக்கு பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு ஐநாவின் தீர்மானங்களை எற்று செயற்பட வேண்டும் என எதிர்பார்த்து நிற்பதாகவும்,

அத்துடன் பொறுப்பு கூறல் தொடர்பாக முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டிய சிவில் சமூக உறுப்பினர்கள்,பாதிப்படைந்தவர்களுக்கு நீதி கடைக்க வேண்டும் எனவும் சுவிஸ் தூதரகக் குழுவினருடன் கலந்துரையாடியாடியள்ளதாகத் தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI