மன்னாரில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் நேற்று (23.10) இரவு தொடக்கம் இன்று (24.10) வியாழக்கிழமை,காலை 11 மணிவரை, இடியுடன் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது கிடைக்கப்பெற்ற தகவலின்படி மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 பேர் தற்பொழுது இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மூன்று இடங்களில் மக்கள் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் நகரத்தில் செல்வநகர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய பொது மண்டபத்தில் 17 குடும்பங்களைச் சேர்நத 55 பேரும்

எழுத்தூரில் அன்னை திரேசா றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில், எமில் நகரில் வசிக்கும் 55 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும்

ஓலைத்தொடுவாய் பகுதியில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் இடம்பெயர்ந்து பொது இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் கன மழை காரணமாக மொத்தமாக 1608 குடும்பங்கள் சேர்ந்த 5883 பேர் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 1390 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இதன் படி மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த 7023 பேர் தற்பொழுது இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும்,
பாதிப்படைந்த மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு . பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI