காசா இன்று உலகின் மிகப்பெரிய குழந்தைகள் மயானமாக மாறியுள்ளது

காசா இன்று உலகின் மிகப்பெரிய குழந்தைகள் மயானமாக மாறியுள்ளது – துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்டோகன்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) கூட்டத்தொடரில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்டோகன், காசா முனையில் நிலவும் கொடூரமான சூழ்நிலை குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார்.

 

தனது உரையில் உலகத் தலைவர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் பேசிய அவர், “ஒரு தந்தையாகவும் பாட்டனாராகவும் நான் கூறுகிறேன்:

 

காசா இன்று உலகின் மிகப்பெரிய குழந்தைகள் மயானமாக மாறியுள்ளது. மனித உயிர்கள் பறிக்கப்படும் ஒரு அவமானகரமான முகாமமாக அது மாறியுள்ளது.

 

காசாவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வாழ உரிமை படைத்தவர்கள். நம் அனைவரின் மனசாட்சியின் அடிப்படையிலேயே நான் இங்கு பேசுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin