ஆஸ்திரேலியாவில் தொலைபேசி போன்று வடிவமைக்கப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மொபைல் போன் வடிவில் மடிக்கக்கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோர்டன் தந்திரோபாய குற்றப்பிரிவு மற்றும் பொது பாதுகாப்பு அதிரடிப் படையினர் இணைந்து ஆகஸ்ட் 2-ஆம் தேதி ‘டிசெப்ஷன் பே’ பகுதியிலுள்ள ஒரு சொத்தில் நடத்திய சோதனையின் போதே இத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin