கால்பந்து செம்பியன்சிப்பில் நடப்பு செம்பியனான அர்ஜென்டினா, ஒரு பெரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஆட்டத்தின் இறுதியில் மூன்று கோல்களை அடித்து அசத்தியது.
இதன் மூலம்இ இன்று எகிப்த்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்டிய ஃப்ரீ கிக் மூலம் அர்ஜென்டினாவுக்காக முதல் கோலை பெற்றார்.
நான்கு நிமிடங்கள் கழித்து, லியோனல் மெஸ்ஸி பெனால்டி பகுதிக்குள் இருந்து கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இதனையடுத்து, கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில், என்சோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார்.
முன்னதாகஇ 15வது நிமிடத்தில், யாசர் இப்ராஹிம், தலையால் முட்டி எகிப்துக்கு முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து முஸ்தபா சிகோ எகிப்தின் இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்
இந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஆர்ஜன்டீனா அணி, காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அல்லது கொலம்பியாவை எதிர்த்தாடவுள்ளது.

