FIFA-வின் நிராகரிப்பு: அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கும் உலகக் கோப்பை அணி!
நடப்பு FIFA World Cup தொடரில் பங்கேற்றுள்ள ஈரான் (Iran) கால்பந்து அணி, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் (FIFA) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான அரசியல் பதற்றங்கள் காரணமாக, ஈரான் அணி அமெரிக்காவில் தங்கிப் பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மெக்சிகோவில் தங்கியிருந்து, போட்டிக்கு ஒரு நாளைக்கு முன்பு மட்டுமே அமெரிக்காவிற்குள் வர அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் போட்டி முடிந்த அன்றே அவர்கள் வெளியேற வேண்டும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெல்ஜியத்திற்கு எதிராக நடைபெறவுள்ள தங்களது அடுத்த போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வர அனுமதிக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை FIFA மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.
இதுமட்டுமின்றி, ஈரான் அணியைச் சேர்ந்த 15 பிரதிநிதிகளுக்கு விசா (Visa) வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அட்டவணையை சமர்ப்பித்த போதிலும், எங்களுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது எங்களது பயிற்சியையும் ஆட்டத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது” என ஈரான் கால்பந்து கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

