மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (ABACUS L1B), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
13 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், தனது அபாரமான கணிதத் திறமையை வெளிப்படுத்திய அவர் உலக அரங்கில் இலங்கையின் பெயரை உயர்த்தியுள்ளார்.
வெற்றியுடன் தாயகம் திரும்பிய மாணவிக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பான வரவேற்பும் கௌரவிப்பும் வழங்கினர்.
கிராமப்புறப் பாடசாலையிலிருந்து சர்வதேச அரங்கில் சாதனை படைத்துள்ள இந்த வெற்றி, நாட்டின் இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
சாதனை மாணவி சும்ரி பாத்திமா சுதாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

